உனக்குள் ஒரு சுரங்கம்! - மூன்று நாள் பயிலரங்கம்

இறைவனின் திருப்பெயரால்…..

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியருக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டமூன்று நாள் பயிலரங்கம்


உனக்குள் ஒரு சுரங்கம்!


வடிவமைத்து நடத்துபவர்: கவுன்ஸலர் மன்சூர் அவர்கள்

(மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர், நூலாசிரியர்)

இப்பயிலரங்கத்தின் சிறப்பு அம்சங்கள் இதோ!

1 மனித வள மேம்பாடு (Human Resource Development)

மனிதர்களுக்குள் புதைந்து கிடக்கின்ற ஆற்றல்களையும், திறமைகளையும் (hidden talents) வளர்த்தெடுக்க உதவும் பயிற்சியே மனித வள மேம்பாட்டுப் பயிற்சி ஆகும். தான் யார்? தனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் என்னென்ன? என்பதை மாணவ மாணவியர்க்கு உணர்த்துகின்ற இப்பயிற்சி, எமது பயிலரங்கத்தின் மிக முக்கியமான அம்சம் ஆகும்!

2 உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாள்தல் (Emotional Intelligence)

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து இன்றைய நவீன உலகில் – மிக அதிகமாக விவாதிக்கப் படுகிறது. உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மிகத் திறமையாகக் கையாள்வது எப்படி எனும் பயிற்சி இப்பயிலரங்கத்தின் இன்னொரு சிறப்பம்சம்.

3 திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை (Premarital Group Counseling)

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளில் பலர் தங்களின் திருமண வாழ்வு குறித்து குழப்பமான மன நிலையில் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு பின்னர் கைசேதப் படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கின்ற இளைய தலைமுறையினருக்கு மிகச் சிறப்பாக வழிகாட்டும் பயிற்சியும் எமது பயிலரங்கத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.

5 தேர்வுகளில் சாதனை செய் (Excel in Examinations)

நம்மில் பல மாணவ மாணவியர்க்கு - படிப்பில் கவனக் குறைவு, நினைவாற்றலில் குறை, நேரத்தைத் திட்டமிட இயலாமை, தேர்வு பயம், மன அழுத்தம், தோல்வி மனப்பான்மை - இவை போன்ற மாணவர்களின் பிரச்னைகளை அலசி, மாணவ மாணவியர் தேர்வுகளை ஆர்வத்துடன் எதிர்கொள்வதற்காக - ஊக்கப்படுத்திடும் (Motivation) பயிற்சியும் எமது பயிலரங்கத்தின் ஒரு சிறப்பம்சமே.

இனிய தமிழில் சிந்தனையைத் தூண்டும் கேள்வி பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் நடத்தப்படும் இப்பயிலரங்கம் – ஒரு பயனுள்ள அனுபவம்!



உனக்குள் ஒரு சுரங்கம்! – பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் சிலரின் கருத்துக்கள் இதோ:

“மிகவும் புதுமையான ஒரு முயற்சி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்க்கையை ஒரு புதுமையான கோணத்தில் பார்க்க வைத்தது. வெறும் சொற்பொழிவாக இல்லாமல் பயிற்சியாக இருந்தது மிகவும் விறுவிறுப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.”

“எனக்குள் ஒரு சுரங்கம் இருக்கிறது என்பதை எளிமையாக எடுத்துரைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”

“இந்த பயிற்சி வகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – கருத்துக்களை தெளிவாகவும், நடைமுறை உதாரணங்களுடன் எடுத்துக் கூறியது.”

“இந்த பயிற்சி வகுப்பில் நான் யார் என்பதை எனக்குள் நான் ஆராய்வதற்கு ஒரு நல்ல ஊக்கமாக இருந்தது.”

“இப்பயிற்சி கட்டாயமாக எல்லா சமூக மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.“

“இப்பயிற்சி முகாம் ஒரு சிறந்த அறிவுக் களஞ்சியம்.”

“இது மாணவர்கள் வாழ்க்கைக்காக நல் வழி காட்டும் நிகழ்ச்சி. மாணவர்களின் தன்மையை உணர வைக்கும் நிகழ்ச்சி.”

“இந்தப் பயிற்சி ஒரு மாணவனின் திறமையை வெளிப் படுத்த உதவியாக இருந்தது.”

“இது எங்கள் அறிவு, திறமை, தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது.”

“இப்பயிற்சி வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான வகுப்பு. இவ்வகுப்பின் மூலம் எங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம். கதைகள் எங்களது மனநிலையை புறட்டிப் போட்டு விட்டது.”

“என்னுடைய திறமையை வெளிக் கொண்டு வந்து எப்படி செயல் படுவது என்று இந்த பயிற்சி வகுப்பு உதவுகிறது.”

“இந்தப் பயிற்சி எல்லா ஊர்களிலும் நமது மாணவர்களுக்கு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.”

மேலும் விபரங்களுக்கு:

மின்னஞ்சல்: samansoorali@gmail.com

இணைய தளம்: http://counselormansoor.blogspot.in/





Comments